நடிகை குஷ்பு விலகுவதால் காங்கிரஸூக்கு எந்த இழப்பும் இல்லை என்று கே.எஸ் அழகிரி கருத்து.
காங்கிரஸில் இருந்து நடிகை குஷ்பு விலகுவதால் காங்கிரஸூக்கு எந்த இழப்பும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் k.s அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகதான் பார்த்தார்களே தவிர, ஒரு நிர்வாகியாக பார்க்கவில்லை; குஷ்பு விலகியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை எனவும் இங்கு அவர் தாமரை இலை மேல் தண்ணீர் போலதான் இருந்தார் காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகதான் பார்த்தார்களே தவிர, ஒரு நிர்வாகியாக பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் எந்தப் பிணைப்பும் இல்லாத அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவி கொடுத்தது பெரிய விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார்.