அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரத்தில் சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்திருக்கின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு கொரோனா இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில தினங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர் ஜெயலலிதா காரில் அ.தி.மு.க கொடியுடன் புறப்பட்டார். இதைப் பார்த்த அதிமுக-வினர் இது சட்டத்திற்கு புறம்பானது என கூறி வந்தனர். இந்த நிலையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் டி.ஜி.பி-யிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் கட்சியில் இல்லாத சசிகலா அ.தி.மு.க கொடியை பயன்படுத்தினார் என்றும் அதை பயன்படுத்த அவருக்கு எந்தவிதமான தார்மீது உரிமையும் இல்லை, அதனால் இனி அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தான் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எனவே சசிசலாவுக்கும் அதிமுகவுக்கும் உரிமை இல்லை அதனால் இனி அதிமுக கொடியை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டி.ஜி.பி-யிடம் புகார் அளித்திருக்கின்றனர்.