சட்டப்பேரவையில் தங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை திமுக முடக்கி வைத்திருப்பதாக அதிமுகவினர் புகார் தெரிவித்த நிலையில், பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றசாட்டி, அங்கிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அப்போது வேறு ஏதாவது காரணம் தெரிவித்து வெளியேறியிருக்கலாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதனிடையே வரும் 13ம் தேதியுடன் சட்டப்பேரவை நிறைவடைய உள்ள நிலை, இன்று சட்டப்பேரவை காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடப்படத்தக்கது.