கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு புரிந்துவிட்டதாக எல்.முருகன் கூறினார்.
தமிழகத்தில் கடவுள்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வருகிறது பாஜக. சமீபத்தில் முருகனின் கந்த சஷ்டி கவசம் பற்றிய கறுப்பர் கூட்டத்தின் வீடியோவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் வேல் யாத்திரையை நடத்தினர். இதேபோல சாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இதனை நேற்று ராமநாதபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின், சிலர் ஆன்மீகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்தலாம் என எண்ணுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்வது தான் மகத்தான ஆன்மீகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். ஏழைகளைக் காக்க கூடியவர்கள் தான் உண்மையிலேயே ஆன்மீகத்தை நேசிப்பவர்கள் என காட்டமாக கூறினார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன். நம்முடைய கலாச்சாரங்களை வீடு வீடாக எடுத்து செல்வதை கடந்த 20ம் தேதி முதல் தொடங்கி வைத்தேன் ,இந்த பிரச்சாரமானது இன்று கடைசி நாள் என்று அவர் தெரிவித்தார்.
read more: மக்களை சந்திக்காத ரஜினி: சீண்டிய விஜய பிரபாகரன்
ஆன்மீகத்தை காரணமாக வைத்து சிலர் திமுக வை வீழ்த்தலாம் என எண்ணுகிறார்கள். மக்களுக்கு தொண்டு ஆற்றுவதே சிறந்த அரசியல் என்று விவேகானந்தர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, “ஸ்டாலினுக்கு மிக பெரிய ஒரு பயம் வந்து விட்டது. கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று அவருக்கு தெரிந்து விட்டது” என பதிலளித்தார்.
இந்தியாவில் பாதி மக்கள் பசியுடன் இருக்கும் நேரத்தில் நாடாளுமன்ற கட்டிடம் தேவையா என கமல் ட்விட்டரில் தெரிவித்த கருத்து குறித்து, பாதி மக்கள் பசியுடன் இருக்கிறார்கள் என அவர் பார்த்தாரா? என கேள்வி எழுப்பினார்? நாடாளுமன்ற கட்டிடம் கட்ட தேவை தற்போது இருக்கிறது. அது அத்தியாவசியமான ஒன்று என தெரிவித்து பேட்டியை முடித்துக் கொண்டார்.