கட்சி ஆரம்பிக்கச் சொல்லி ரஜினிக்கு பாஜக அதிகப்படியான அழுத்தம் தந்துவிட்டதாக கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்த நிலையில் தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என அறிவித்து, தன்னை நம்பியவர்களிடம் மன்னிப்பு கேட்டு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ரஜினியின் முடிவை அரசியல் தலைவர்கள் வரவேற்றிருந்தாலும் கமல்ஹாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏமாற்றமளிப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர்கள் அரசியல் செய்ய முடியாது. அவர்கள் தேர்தல் அரசியலில் பங்கெடுக்க முடியாது, விரும்பவும் மாட்டார்கள். 1996இல் ரஜினிக்கு ஓர் அழுத்தம் கொடுக்கப்பட்டு அவரைக் கட்சி ஆரம்பிக்கச் சொன்னபோது அவர் மறுத்தார். அப்போது, இதைவிட மிகப் பிரபலமாகவும், செல்வாக்குடனும் இருந்தார். நல்ல உடல்நலனும் இருந்தது. அப்போது கட்சி ஆரம்பித்தால் வெற்றிபெற்றிருக்கக் கூடும்.” என்று தெரிவித்தார்.
1996ஆம் ஆண்டே ரஜினிக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. பாஜகவின் நோக்கம் என்னவென்றால் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுவிடக் கூடாது. அதற்காக ரஜினிக்கு கட்சி ஆரம்பிக்கச் சொல்லி அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது என்ற அவர்,
read more: அதிமுக இரண்டாக உடையும், ஓபிஎஸ் கழண்டுசெல்வார்: ஸ்டாலின்
இந்த முறை திமுக கூட்டணியைத் தோற்கடித்தால் அதிமுகவைக் கையில் வைத்துக்கொண்டு பாஜகவின் நேரடி ஆட்சியைத் தமிழகத்தில் நடத்த முடியும் என்று நினைத்திருந்தார்கள். அவர்களுடைய ராஜதந்திரிகள் அந்த ஆலோசனையைத்தான் வழங்கினார்கள். அதன் விளைவுதான் ரஜினிகாந்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது” என்று கருத்து தெரிவித்தார்.