பள்ளிக்கல்வித்துறைக்கென பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்
* QS தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைகழகத்தை இடம்பெற செயல் திட்டம்
* நீலகிரி, சென்னை உள்பட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டு புதிதாக 15,000 இடங்கள் உருவாக்கப்படும்
* வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்
* அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்வு
* புதுமைப்பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு..
* ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்படும்; இதற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு
* அரசுப்பள்ளிகளில் ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும், ரூ.56 கோடியில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும் தரம் உயர்த்தப்படும்
* மலைப்பகுதிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க, உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
* பள்ளிக்கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
* போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும்
* 2676 அரசுப்பள்ளிகளில் ரூ.65 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
* பள்ளிக் கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
* இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு என்று மொத்தம் 46.767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.