உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து, இன்று காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது மத்திய அமைச்சர் மகனின் கார் விவசாயிகள் மீது மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் நேற்று பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர், உத்தரப்பிரதேச மாநில வன்முறையை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.