ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் விவாதத்திற்கு தயார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பவானியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக உடையும் என்று ஸ்டாலின் சொன்னார். இப்போது மு.க.அழகிரி கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆக, எந்தக் காலத்துக்கும் அதிமுக உடையாது. திமுக உடையாமல் இருப்பதற்கு வேண்டுமானால் ஸ்டாலின் வழிபார்த்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
பொய்களை அள்ளி வீசி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதையே ஸ்டாலின் நோக்கமாகக் கொண்டுள்ளார் என குற்றம்சாட்டிய முதல்வர், தன் மீதும் அமைச்சர்கள் மீதும் ஆளுநரிடம் ஸ்டாலின் அளித்துள்ள ஊழல் புகார்கள் பற்றியும் கருத்து தெரிவித்தார். ஊழல் எங்கே நடந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விவாதத்துக்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஸ்டாலின் துண்டு சீட்டு எதுவும் இல்லாமல் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என முதல்வர் சவால் விடுத்தார்.
read more: 20 சதவிகித இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்தேனா? மறுக்கும் பன்னீர்செல்வம்
நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தலைமையிலான ஆட்சிதான். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் உலகையே உலுக்கியது. இப்படிப்பட்ட திமுகதான் அதிமுக அரசு மீது குற்றம்சாட்டுவதாகவும் கூறினார்.