புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு மாதமும் கடையில் மருத்துவக் குழுவினர், மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அந்த ஆலோசனையின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா குறையத் துவங்கியதை அடுத்து மருத்துவக் குழு பரிந்துரையின் பேரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.
தற்போது, பெரும்பாலான தளர்வுகள் அளிக்கப்பட்டுவிட்டதால் பொதுமக்களின் இயல்பாக தங்களது பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். தற்போது தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 1,000 பேருக்கு மட்டுமே நாள்தோறும் தொற்று உறுதியாகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறிப் பரவி வருவதால், மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
read more: காடுவெட்டி குரு வீட்டிற்கு உதயநிதி திடீர் விசீட்!
அதில் எடுக்கப்படும் முடிவின்படி தளர்வுகளை அறிவிப்பதா அல்லது கட்டுப்பாட்டை மீண்டும் அதிகரிப்பதாக என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்கிறார். பின்னர் தனது முடிவினை அறிவிப்பாக வெளியிட இருக்கிறார்.