தி. மு. க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. முதல் முறையாக காணொலி காட்சி மூலமாக இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது.சரியாக இன்று காலை 10 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது.
திமுகவின் ஒவ்வொரு பொதுக்குழுவும் மிகவும் பிரமாண்ட முறையில் நடப்பது வழக்கம். ஆனால், இந்த முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக இந்த பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். அந்தந்த மாவட்டத்தில் உள்ள அணிகளின் மாநில அமைப்பாளர்கள் ஏன ஏறக்குறைய 3500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
காணொலி காட்சி மூலமாக பொதுக்குழு நடைபெற உள்ளதால் சிறப்பு அழைப்பாளர்களுக்கு இந்தமுறை அழைப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது. வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எடுக்க வேண்டிய வெற்றி வியூகங்கள் பற்றி இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.