டெல்லியில் ஜெயலலிதா பெயரில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

ஜெயலலிதா பெயரில் பள்ளி
டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால், டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்திற்கு மயூர் விகாரில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மயூர் விகாரில் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிதியுதவி வேண்டி, தமிழ்நாடு முதல்வரிடம் டெல்லித் தமிழ்க் கல்விக் கழகம் கோரிக்கை வைத்தது.
அக்கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகாரில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டார்.
முதல்வர் திறப்பு
கடந்த 2018ம் ஆண்டு ஜெயலலிதாவின் பெயரில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு தமிழ்நாடு முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக
அடிக்கல் நாட்டினார்.
டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் ஜெயலலிதாவின் பெயரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இப்புதிய பள்ளிக் கட்டிடம் 6,515 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.




