உள்ளாட்சி தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தினை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 9 மாவட்டங்களுக்கான 92 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இந்நிலையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தினை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.




