அதிமுகவை காப்பாற்றுவேன் என பிப்ரவரி 24 அன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உறுதி ஏற்க வேண்டும் என தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை :
இபிஎஸ், ஓபிஎஸ் அதிமுக சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ஜெயலலிதா மறைந்தாலும் அவரது ஆத்மா நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது என நம்புகிறோம். அவரது உழைப்பாலும் தியாகத்தாலும் வளர்த்த இயக்கத்திற்காக நன்மை செய்வோம்.ஆட்சியில் அமரவைக்கும் மக்களுக்குத்தான் இயக்கம் சொந்தம். அதிமுகவை விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசியப்படுத்தியோ வாங்க முடியாது.
எதிரிகளும் துரோகிகளும் கைக்கோர்த்துக்கொண்டு நம் படையை வீழ்த்தும் நோக்கில் செயல்படுகின்றனர். உழைப்பு, உத்வேகம், ஒற்றுமை உணர்வால் அவர்களை தோற்கடித்து விரோதிகளுக்கு பாடம் கற்பிடிக்க வேண்டும்.
Read more – புதுவையே சாட்சி.. தமிழகத்திலும் தொடரும் திமுக, காங்கிரஸ் வீழ்ச்சி.. பாஜக தலைவர் எல். முருகன் பேச்சு
நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருக்கிறார்கள். நம் விசுவாசம் அதிமுகவுக்கும், மக்களுக்கும் மட்டுமே சொந்தம். எனவே, ‘அதிமுகவை காப்பாற்றுவேன்’ என ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றி உறுதியேற்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.