முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை நிறைவு பெற்று விடுதலையானார்.
பெங்களூர் :
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது.
இந்தநிலையில் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா விடுதலை ஆனார். மேலும், விக்டோரியா மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் சிறையில் அவர் பயன்படுத்திய உடமைகள் ஒப்படைக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
Read more – மெரினா கடற்கரையை நோக்கி படையெடுக்கும் அதிமுக தொண்டர்கள்..
விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்று வரும் பகுதியில் இருந்து காவல்துறையினரின் காவல் விலக்கிக கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் தற்போதைய நிலையில் அடுத்த சில நாட்கள் சசிகலா பெங்களூருவில் தான் இருக்கப்போகிறார் என்றும் அவரது உடல்நிலை முழுவதும் குணமாகிய பிறகே அவரை தமிழகத்திற்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சசிகலாவின் விடுதலை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.