சிறைத்துறைக்கு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் எழுதிய கடிதத்திற்கு கிடைத்துள்ள பதில் கடிதம் குறித்து கிடைத்த பிரத்யேக தகவலை இங்கே காணலாம்.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அவர்களுக்கு உடல் நிலை சற்று குன்றி உள்ளது என்ற தகவல் பரவிவருகிறது. இந்நிலையில் பெங்களூரு சிறைச்சாலை பரப்பன அக்ரஹார சிறைத்துறை பாதுகாவலர் அவர்களுக்கு வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் அவர்கள் கடிதம் விடுத்துள்ளார். அந்த கடிதமானது சசிகலா அவர்களால் பெறப்பட்டுள்ளது. பின்னர் அவர் வழக்கறிஞர் ராஜா சென்ஹடூரபாண்டியன் அவர்களுக்கு பதில் கடிதம் ஒன்று எழுதினர். அதை பற்றி அவர் சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
அந்த கடிதத்தில் என்ன எழுதி இருக்ககூடும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் அவர் எழுதியது யாதெனில். கொரோன தோற்று பறவை தமிழ்கத்தில் உள்ள அனைவரும் அவதிக்கு உள்ளாகி இருகிட்னரானர். அதனால் நான் மிகவும் வேதனை படுகிறேன். கொரோனவால் நிறைய உயிர் சேதாம் ஆகி இருக்கும் செய்தியையும் அறிந்தேன், தமிழக மக்களும் மற்ற மாநிலத்தின் மக்களும் கொரோனாவில் இருந்து கூடிய விரைவில் மீண்டு வர நான் கடவுளை பிராத்திக்கிறேன்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டபடி, சிறைத்துறை எனது நன்னடத்தை ரெமிஷன் விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன். உத்தரவு கிடைத்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதன்படி அபராதத் தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும். கர்நாடக நீதிமன்றத்தில் அபராதம் கட்டிய பிறகு உச்ச நீதிமன்றத்தில் 14-2-2017 தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு விஷயத்தில், சட்டப்படியாக குயூரிட்டி மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும்.
மேலும் இதுகுறித்து டி.டி.வி. தினகரனிடம் ஆலோசிக்கவும். நான் வணங்கும் கடவுளின் ஆசியாலும், என்னுடன் பிறவா அக்காவின் ஆசியாலும், அவரின் கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆசியாலும் நான் நன்றாக உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.




