அரசியலில் இப்போது தான் நுழைந்துள்ளேன், இனிமேல் தான் ஆட்டத்தை பார்க்கப்போறீங்க என நடிகை சகிலா தெரிவித்துள்ளார்.

சென்னை :
நடிகை சகிலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறத. இதைப்பற்றி நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். அந்த நோக்கில் தான் பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்தேன் என்றார்.
மேலும், காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக நான் வரவில்லை. நடிகை என்பதை தாண்டி ஒரு தனி அடையாளம், தனி அதிகாரம் பெற விரும்புகிறேன். நல்லது செய்ய வேண்டும் என்றாலும் கூட ஒரு பவர் வேண்டும் அதற்காக அரசியலை தேர்ந்தெடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
Read more – இந்த ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர், அதனால் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் – அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து பேசிய அவர், அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா பல விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீங்க என்று கெத்ததாக பதிலளித்தார்.




