அன்புக்கு நான் அடிமை, அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன் என்று சசிகலா கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா கொரோனா சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொண்டர்களை பார்த்து உற்சாகமடைந்த சசிகலா கிருஷ்ணகிரி அருகே காரில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார். அன்புக்கு எப்போதும் நான் அடிமை என்று அவர் கூறினார்.
நிச்சயமாக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் ஜெ. நினைவிடம் அவசரமாக ஏன் மூடப்பட்டது என்று அனைவரும் அறிந்ததே என்றும் சசிகலா கூறினார். அதிமுக அலுவலகத்துக்கு செல்வேனா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். கொடியை பயன்படுத்தியதற்கு அதிமுக அமைச்சர்கள் புகார் அளித்தது அவர்கள் பயத்தையே காட்டுகிறது. அன்புக்கு நான் அடிமை தொண்டர்களுக்கு நான் அடிமை ஆனால் அடக்குமுறைக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்று சசிகலா பேசினார்.