Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

திமுக-வுடன் கைகோர்க்க திட்டம்!!! அதிமுக-வை கழட்டி விட முடிவு!!!

January 18, 2021

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக-வை கழட்டி விடுவதே சரி என்கிற முடிவிற்கு பாமக மேலிடம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ராமதாஸ் கூட்டணி விவகாரத்தில் மிகுந்த பொறுமை காத்து வருகிறார். அதிமுக பலமுறை இறங்கிச் சென்றும் அந்த கட்சியுடன் கூட்டணி சேர ராமதாஸ் ஆர்வம் காட்டவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு எனும் உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். ஆனால் வன்னியர்களுக்கு மட்டும் 20 சதவீத இடஒதுக்கீடு என்பது தேர்தல் நேரத்தில் சரியாக இருக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக இருக்கிறார்.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

இதனால் இரண்டு முறை நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் சாதகமான எந்த முடிவும் ஏற்படவில்லை. சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணியில் இருக்க வேண்டும் என்பது எடப்பாடியின் மிகப்பெரிய விருப்பம். இதற்காக தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக்கூடத் தயார். அதே போல் பாமகவின் தேர்தல் செலவுகளையும் கவனித்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி ரெடியாகவே உள்ளார் என்கிறார்கள். ஆனால் ராமதாஸ் தான் பிடிகொடுக்க மறுக்கிறார் என்று பேச்சுகள் அடிபடுகின்றன. அதற்கு காரணம் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா? என்கிற ராமதாஸின் யோசனை தான் என்று சொல்கிறார்கள்.

கடந்த 2009 தேர்தல் தொடங்கி தற்போது வரை அனைத்து தேர்தல்களிலும் பாமக தோல்வி அடைந்தே வருகிறது. எனவே பாமகவை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் இந்த தேர்தலில் வென்று கணிசமான எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். அதே சமயம் கூட்டணி அரசு அமையும் பட்சத்தில் அமைச்சரவையிலும் இடம்பெற வேண்டும். எனவே அதற்கு ஏற்ப தேர்தல் வியூகத்தை ராமதாஸ் வகுப்பதாக சொல்கிறார்கள். அதிமுக ஏற்கனவே பத்துவருடங்களாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள கட்சி. எடப்பாடி பழனிசாமி கடந்த 4 வருடங்களாக மட்டுமே முதலமைச்சராக உள்ளார்.

இருந்தாலும் அதிமுக அரசு மீதான அதிருப்தி திமுகவிற்கு வெற்றியை தேடித் தரும் என்று ராமதாஸ் கருதுவதாக சொல்கிறார்கள். திமுகவா? அதிமுகா? என்கிற கேள்விக்கு பெரும்பாலும் திமுகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றே கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பலரும் பதில் கூறியுள்ளனர். எனவே அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து திமுக கூட்டணியில் இணைவது குறித்து ராமதாஸ் ஆராய்வதாக சொல்கிறார்கள். இதற்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் திமுக, வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான வாக்குறுதியை அளிக்க வேண்டும் என்கிற வரையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். பாமக திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் இயல்பாகவே விசிக கூட்டணியில் இருந்து விலகிவிடும். எனவே திமுக கூட்டணியில் பாமக இன்? விசிக அவுட்? என்கிற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

‘எல்லா புகழும் உங்களுக்கே…’- ஆரியின் நெகிழ்ச்சி பதிவு!

Next Post

கொரனோ தடுப்பூசிகளுக்கு மக்கள் அச்சப்பட காரணம் என்ன?

Next Post

கொரனோ தடுப்பூசிகளுக்கு மக்கள் அச்சப்பட காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version