இந்திரா காந்தியின் 104வது பிறந்தநாள், டெல்லியில் உள்ள சக்தி ஸ்தலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் மரியாதை.

டெல்லி,
நாட்டின் 3 பிரதமரும் முதல் பெண் பிரதமருமான, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள சக்தி ஸ்தலத்தில் ( Shakti Sthal ) மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில்,
“நாட்டு மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதமரிகளில் இந்திரா காந்தியின் பெயரும் பொன் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதாகவும்; மக்களுடன் ஒன்றிணைந்து அவர்களின் இன்பம் துன்பங்களை பகிர்ந்து கொள்வதே அவரது மிக பெரிய சக்தியாக விளங்கியது! எனவும் இறுதியாக பாட்டி உங்களின் தைரியம் எப்போதும் எனக்கு ஊக்கமளிக்கிறது, என்னுள் இப்போதும் உங்களை காண்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல, பிரதமர் நரேந்திரமோடி “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் என் அஞ்சலியை செலுத்துகிறேன்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.




