முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் கூட்டத்தில் பரவாத கொரோனா வைரஸ் தொற்று வேல் யாத்திரையால் மட்டும் பரவுமா? என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
பாஜக சார்பில் கடந்த 6-ம் தேதி வேல் யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக மாநிலத் தலைவர் முருகன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வேல் யாத்திரை விவகாரம் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியிருப்பதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் பங்கேற்ற கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல்வர் கூட்டத்தில் பரவாத கொரோனா நோய் தொற்று வேல் யாத்திரை நடத்தினால் பரவி விடுமா?
அந்தக் கூட்டத்தில்யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவாது என்று முதல்வரால் உறுதி அளிக்க முடியுமா.
எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தே வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்தது.
இவ்வாறு எச்.ராஜா கூறி உள்ளார்