அதிகார வெறி, அரசியல் சாதிய கணக்குகள் அதிகரித்துள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ், சினிமா மற்றும் அரசியல் என்று பல தளங்களில் பிஸியாக இயங்கி வந்தாலும் சமுக நிகழுகளை உற்றுக் கவனித்து தனது கருத்துகளைத் தெரிவிப்பார்.
இந்நிலையில் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்,’’ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது. நாளை நமதே என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவமதிக்கப்படுவது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், , பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவமதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது பெரியார் பிறந்த மண் என்று பேசிவரு்கிறோம்…இதுவா பெரியா பேசுயது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இன்று அதிகார வெறி, அரசியல் சாதிய கணக்குகள் அதிகரித்து வருவதையும் மேலோங்கியுள்ளதை மக்கள் பார்த்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.