சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் தலைவர்களுக்கு அலுவலக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர் என பலருக்கும் தனித்தனியே அறை ஒருக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மண்டலப் பொறுப்பாரான கனிமொழிக்கும் அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள எம்.பி கனிமொழி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் எனக்காக ஒதுக்கப்பட்டுள்ள புதிய அலுவலக அறையை கழகத் தலைவர் – முதலமைச்சர் அண்ணன் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், துணை பொதுச் செயலாளர் – நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா, கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி, கழக செய்தி தொடர்பு தலைவர் திரு. டி.கே.எஸ். இளங்கோவன், இணை அமைப்புச் செயலாளர் திரு. அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் திரு. எஸ். ஆஸ்டின், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. துறைமுகம் காஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.




