பா. ஜ. க கட்சியின் உறுப்பினர் மீது குவிந்த வண்ணம் உள்ளன புகார்கள்
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளர் என்று சொல்லிக் கொண்ட மதன்.
இவர் ‘மதன் டைரி’ என்ற பெயரில் யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வாரார்.
இந்த சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மதன், “பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்துமீறி நடக்கின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர். அதற்காக சில இடங்களையும் சென்னையில் வைத்துள்ளனர். 15 தலைவர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த வகையில், பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி.ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று பாருங்கள்” எனக் கூறி ஒரு காட்சியை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கே.டி.ராகவன் ஒரு பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டே, விவரிக்க முடியாத ஒரு தவறான செயலில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது குறித்து தொடர்ந்து பேசிய மதன், “இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பேசினோம். அவரது ஒப்புதலுடன்தான் இந்த வீடியோவை வெளியிட்டோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதை அடுத்து இவ்விவகாரம் #பாலியல்ஜல்சாகட்சி என்ற பெயரில் ட்ரெண்டிங் ஆகும் சூழலில் மேலும் சில முக்கிய புள்ளிகளின் நிர்வாண வீடியோ வெளியாக போறதா தகவல் வெளியாகி உள்ளது..
குறிப்பா அண்மையில் முக்கிய பதவிக்கு சென்ற ஒருவரின் வீடியோவும் இதில் சிக்கியுள்ளதாம். இதனால் அடுத்தடுத்த வீடியோ வெளியாகக்கூடுமோ என்று முக்கிய புள்ளிகள் கலக்கத்திலும் வேறு பலர் உற்சாகத்திலும் இருக்காய்ங்களாம்.