மதுரை மாநகர் திமுக இரண்டாகப் பிரித்து பொறுப்பாளர்களை நியமித்தார் துரைமுருகன்.
மதுரை மாநகர் மாவட்ட திமுக, மதுரை மாநகர் வடக்கு – மதுரை மாநகர் தெற்கு ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்த மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களையும் நியமித்து உள்ளது திமுக. சட்டப்பேரவை தேர்தலானது நெருங்கி வரும் நிலையில், கட்சிப் பணிகள் வேகமெடுக்கவும், தொய்வின்றி நடக்கவும் திமுகவின் மாவட்ட அமைப்புகள் பிரிக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர், வடசென்னை, மேற்கு சென்னை, தஞ்சை மாவட்ட திமுக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் அந்த அந்த இடத்திற்கு பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இன்று மதுரை மாநகர் மாவட்ட திமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்
மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
மதுரை வடக்கு
மதுரை தெற்கு
மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
மதுரை மத்தியம்
மதுரை மேற்கு
மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
கட்சி நிர்வாகத்திற்காகவும், கட்சி பணிகள் செய்வதற்காகவும் புதியதாக அமையப் பெற்ற மதுரை மாநகர் வடக்கு – மதுரை மாநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்குப் பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மதுரை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் – பொன்.முத்துராமலிங்கம்
மதுரை மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் – கோ.தளபதி”.
இவ்வாறு துரைமுருகன் தன் அறிவிப்பில் தெரிவித்து இருந்தார்.