பாஜக விளம்பரத்தில் அதிமுக கட்சி நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பயன்படுத்திருப்பது கூட்டணிக்குள் புகைச்சலை உருவாக்கியுள்ளது

கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் அதிமுக கட்சியுடன் , தேமுதிக, பாமக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துத் தேர்தல் களம் கண்டனர். ஆனால் எதிர்ப்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில், அதிமுக முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ அறிவித்தார்.
அதன்பின் பேசிய அதிமுக அமைச்சர்கள், இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளர்களாக ஏற்பவர்கள் மட்டும்தான் அதிமுக கூட்டணியின் தொடர முடியும் என்றார்.
பின்ன அவ்வப்போது, அதிமுக அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் மாறி மாறி விமர்சனங்கள் கூறி வந்தபோது,கூட்டணி குறித்த கேள்வி எழுந்தது.
நேற்று நடிகை குஷ்பு தலைமையிலான பாஜகவினரின் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பஜாகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அடுத்தம்மாதம் நவம்பர் 6 ஆம் தேதி பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் வெற்றிவேல் யாத்திரை தொடங்கவுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியானது.
அதில், எம்.ஜி.ஆர் படம் இடம்பெற்றுள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக தலைவர் கூறும்போது, மக்களுக்கு எம்,.ஜி.ஆரை போன்று மோடியும் உதவி செய்துவருகிறார் என்பதை கூறவே இப்படம் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் அதிமுக – பாஜக இடையே கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.




