புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி :
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து 4 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. மேலும், தற்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தலா 14 எண்ணிக்கையில் சமபலத்துடன் இருப்பதால் எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது.
மேலும், ராகுல்காந்திக்கு தமிழ் தெரியாது என்ற காரணத்தினால் அவரிடம் தன்னைப் பற்றிய புகாரை மறைத்து நாராயணசாமி பேசினார் என்ற புகாரும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது: உங்களைப்போன்று நானும் அதை பார்த்தேன். மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு கலை. அதை தெரிந்தவர்கள் செய்ய வேண்டும் என்றார். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது முதன்முதலில் வெற்றியை பதிவுசெய்த மாநிலம் புதுச்சேரி.அதனால் தான் மீண்டும் புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும்.
Read more – தமிழக சட்டசபை தேர்தல் : இணைத்தேர்தல் அதிகாரிகள் புதிதாக நியமனம்
மேலும், 7 பேர் விடுதலை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடுதான்,அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும், அதிமுகவில் சசிகலாவுக்கு என்றும் உரிமையில்லை என தெரிவித்தார்