Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

பல்வேறு நலத்திட்டப் பணிகளைப் பார்வையிட்ட எம்.பி துரைவைகோ

June 20, 2025

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் ரயில்வே துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, அவை செயலபட்டு வரும் இடங்களுக்கு எம்.பி துரைவைகோ நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது திருச்சி தொகுதி மக்களின் இரயில்வே துறை சார்ந்த நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், இரயில்வே உயர் அதிகாரிகளையும் சந்தித்து, கோரிக்கை வைத்து, ஒப்புதல் பெறப்பட்டு, தொடங்கப்பட்ட மற்றும் தொடங்கப்பட வேண்டிய பணிகளை இன்று (20.06.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

ISI முத்திரை இல்லாத பொருட்கள் – ₹.2 லட்சம் அபராதம்

முதலில், சஞ்சீவி நகரில் அமைய உள்ள இரயில்வே மேம்பாலம் (ROB) கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டேன். முன்னதாக இப்பகுதிக்கு வந்தபோது, அருகிலுள்ள மற்றொரு இரயில்வே கேட் பகுதியில் வாகன சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இப்பகுதியில் மேம்பாலமும் சுரங்கப்பாதையும் ஒரே இடத்தில் அமைப்பதற்குப் பதிலாக, அருகிலுள்ள மற்றொரு இரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதையை அமைக்க வேண்டுமென திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரைச் சந்தித்து மனு அளித்தேன். ஆய்வுக்குப் பிறகு, எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.

தற்போது, மேம்பாலக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் அருகில் உள்ள சுரங்கப்பாதைக்கு உண்டான கட்டுமானப்பணியை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத இடங்களில் இப்போதே தொடங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொண்டேன். அதற்கு இரயில்வே துறையினர் ஒப்புதல் தெரிவித்தனர். இதற்கான வரைபடத்தைப் பார்வையிட்டு, விளக்கங்களையும் கேட்டறிந்தேன்.அடுத்ததாக, மேலகுமரேசபுரம் பகுதியில் இரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு உண்டான சாத்தியக்கூறுகளை, இரயில்வே அதிகாரிகள் தயாரித்துள்ள வரைபடத்தை வைத்து ஆய்வு செய்தேன். அதில் நீர்வளத்துறை சாலை, பஞ்சாயத்து சாலை ஆகிய தமிழ் நாடு அரசு துறை சாலைகள் வருவதாலும், கூடுதல் சவால்கள் உள்ளதாலும் ஒன்றிய இரயில்வே அமைச்சருக்கும், தென்னக இரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி எடுத்துரைத்து நான் அழுத்தம் கொடுக்கவுள்ளேன்.

மூன்றாவதாக, மேல்கல்கண்டார்க்கோட்டை பகுதியில் மேம்பாலம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டேன். மஞ்சத்திடலில், MEMU பணிமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், இருபுறமும் உள்ள மக்களுக்கான பாதை அடைபடுகிறது. இதனால் இரயில்வே பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிப்பதற்கு ஏதுவாக, இருபுறமும் உள்ள சாலைகளை இணைக்கும் விதமாக வாகன சுரங்கப்பாதையை அமைக்க கோரிக்கை வைத்தேன். அங்கும் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதனையும் பார்வையிட்டேன். அக்கட்டுமானப்பணியின் போது போக்குவரத்திற்கு தடைவிதிக்க கூடாது என்றும், அப்படி அவசியம் ஏற்பட்டால் இரவு நேரங்களில் மட்டும் அடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுக்கொண்டனர். இந்த பணி செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்றும் உறுதியளித்தனர்.

பிறகு, பொன்மலை கோல்டன் ராக் பணிமனையை சென்னை பெரம்பூர் ICF பணிமனை போல தரமுயர்த்த கோரிக்கை வைத்திருந்தேன்.முதற்கட்டமாக, 300 கோடி ரூபாய் மதிப்பில் வந்தே பாரத் மற்றும் மெட்ரோ இரயில்களின் பழுது நீக்கும் பணிமனை அமைக்க ஒன்றிய இரயில்வே துறை ஆரம்பக்கட்ட திட்டம் வைத்துள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் பெருகுவதோடு, பல புதிய வந்தே பாரத் இரயில்கள் திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் வாய்ப்பும் நிச்சயம் கூடும். அதனால் பல வகையில் திருச்சி மற்றும் சற்று வட்டாரப்பகுதி வளர்ச்சி அடையும். எனவே அதனை விரைந்து கொண்டுவரவும், ICF போல தரம் உயர்த்துவதற்கு தொடர்ந்து அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்வேன்.

இறுதியாக மாரிஸ் மேம்பாலத்தின் பழைய பாலம் இடிக்கப்படாமல் பணிகள் தாமதமாக இருந்ததை அறிந்து, முதல் DISHA கூட்டத்தில் கோரிக்கை வைத்தேன். பின்னர், 23.04.2025 அன்று தென்னக இரயில்வே பொது மேலாளரைச் சந்தித்து விரைவாக நிறைவு செய்யக் கோரினேன். ஜூன் 2025 இறுதிக்குள் பணிகளை முடிப்பதாக இரயில்வே கோட்ட மேலாளர் உறுதியளித்திருந்த நிலையில், 13.05.2025 அன்றே பழைய பாலம் இடிக்கப்பட்டு பணி நிறைவு செய்யப்பட்டது. அங்கு தற்போது புதிய பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனையும் பார்வையிட்டேன். இப்பணியை விரைவில் முடித்து புதிய பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு இரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன். அப்போது அதிகபட்சமாக ஜூன் 2026 க்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று நம்பிக்கை அளித்தனர். இந்த ஆய்வுப் பயணத்தில் திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர்கள், திமுக முன்னோடிகள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உடனிருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

முதல்வர் மருந்தகம் குறித்து வந்த தகவல் உண்மையில்லை – அமைச்சர்

Next Post

போதைப்பொருள் குறித்து இபிஎஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது – மா.சு

Next Post

போதைப்பொருள் குறித்து இபிஎஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது - மா.சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version