வரும் 25 ஆம் தேதி நரேந்திர மோடி மீண்டும் தமிழக வருகிறார், கோவையில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
தமிழக மக்கள் மோடியை மிகச் சிறப்பாக வரவேற்று இருக்கிறார்கள் என்று பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்தார் அதிமுக பாஜக கூட்டணி நிச்சயம் இந்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் அதேபோல பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் தேர்தலுக்குப்பின் சட்டமன்றத்தில் இடம் பெறுவார்கள். அதிமுக தான் தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணி கட்சி இது தொடர்பாக அவர்கள் பேசி வருகிறார்கள், இது குறித்த அனைத்து முடிவுகளையும் அவர்களை எடுப்பார்கள். தமிழக மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள், மோடியின் மத்திய அரசும் எடப்பாடி பழனிசாமியின் அரசு சிறப்பாக மக்கள் சேவையாற்றிய வருவதால் இந்த தேர்தலில் திமுக கூட்டணி வீழ்த்தப்படும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 19ஆம் தேதி தமிழகம் வருகிறார். அதன் தொடர்ச்சியாக 21ம் தேதி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலம் வருகிறார், 25ம் தேதி நரேந்திர மோடி கோவை வருகிறார் என்று சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.