தொலைத்தொடர்பு பணிகளுக்காக சாலைகளை தோண்டும் போது குடிநீர் வாரிய அதிகாரிகள் இடமும் அனுமதி பெற வேண்டும் என துணை மேயர் மகேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. மாமன்ற கூட்டத்தில் பேசிய துணை மேயர் மகேஸ் குமார், சென்னை மாநகராட்சி சாலைகளில் மேற்கொண்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரக்கூடாது. ஒரு வேலை அதற்கான ஒப்பந்தம் கோரினால் செம்டம்பர் மாத்திற்குள் அதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என்பது தனது கருத்து என கூறினார். குறிப்பாக தொலைத்தொடர்பு பணிக்காக சாலைகளை தோண்டும் போது குடிநீர் வாரிய அதிகாரிகள் இடமும் அனுமதி பெற வேண்டும்.

நேற்றைய தி்னம் சென்னை மாநாகராட்சி பள்ளிகளில் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் போது வடசென்னையில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் பல மாணவர்கள் நூற்றுக்கு நூற்றுக்கு பெற்றுள்ளனர். அது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. வடசென்னையிலும் கல்வி வளர்ச்சி அதிக அளவு உள்ளது. பல இடங்களில் மல்டிலெவல் கார் பார்க்கிங் செயல்வடிவம் பெறாமல் உள்ளது. அதே போல சென்னையில் வாகன நிறுத்தவதற்கான ஒப்பந்தம் முடிந்துள்ளது. பார்க்கிங்க கட்டணம் வசூலிக்கப்படாமல் உள்ளதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. அதற்கு புதிய ஒப்பந்தம் கோர வேண்டும். அதனால் நமக்கு வருமானம் இழப்பு ஏற்படுகிறது. எனவே புதிய ஒப்பந்தம் விரைவில் கோர வேண்டும் என தெரிவித்தார்.




