மரக்காணம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்கும் கருவி கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசாரிடம் டாக்டர் ராமதாஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. தைலாபுரத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்திற்கு தனிப்படை போலீசார் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





