வருகின்ற பிப்.22ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி :
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து 4 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. மேலும், தற்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தலா 14 எண்ணிக்கையில் சமபலத்துடன் இருப்பதால் எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமி, பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க அன்பழகன் உள்ளிட்டோர் புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
இந்தநிலையில், நேற்று புதிதாக புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக பதவி ஏற்ற தமிழிசை சௌந்தரராஜன் ஆளும் காங்கிரஸ் கட்சி வருகின்ற பிப்.22ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 19.02.2021!!!
மேலும், அதில் கூறப்பட்ட அம்சங்கள் :
- பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே பேரவை கூட்டப்பட வேண்டும் எனவும், வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் கைகளை தூக்கித்தான் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும், இந்த நடவடிக்கைகளின் முடிவுகளை அன்றைய (22.02.21) தினம் மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும்.
- எந்த நிலையிலும் பேரவை அலுவலை ஒத்தி வைக்கவோ காலதாமதம் செய்யவோ, முடக்கவோ கூடாது. அமைதியாக பேரவையை நடத்தி முடிக்க பேரவை செயலர் உறுதி படுத்த வேண்டும்.