தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநில தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
ஜூலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆகஸ்ட்டில் எஸ்.பி.வேலுமணி, செப்டம்பரில் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய உறவினர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதுகுறித்து பதிவு செயப்பட்ட எப்.ஐ.ஆரில், 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 2021 மார்ச் 31ம் தேதி வரை 5 ஆண்டுகளில் மட்டும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும், யார் யார் பெயரில் எங்கெல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகின.
இந்நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநில தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளருமான இளங்கோவனின் சேலத்திலுள்ள வீடு மற்றும் சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகியுள்ள
அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய நான்கு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகிறது. சென்னை நந்தனத்தில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வீடு, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும், அதேபோல் மற்றொரு உதவியாளரான முருகன் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.