கடந்த 25 வருடங்களாக தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் நடிகர் ரஜினிகாந்த் அவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது புரியாத புதிராக இருந்து வருகின்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவேன் என ரசிகர்களிடம் உரையாற்றினார் அதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
சட்டமன்ற தேர்தல் வர சில மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் ரஜினிகாந்த் தரப்பில் ஒரு வித முன்னேற்றமும் பாடுகளும் எடுக்கவில்லை ஆனால்,அவரது ரசிகர்களோ ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்பதில் அவருடைய ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை பற்றிய தகவலால், அவர் அரசியலுக்கு வருவதில் பெரும் சந்தேகம் எழுந்து வருகிறது . இதனையடுத்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டினர்.
அதன்படி திண்டுக்கல்லிலும் உள்ள ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், “எங்களின் இறுதி நம்பிக்கை நீங்கள் மட்டும் தான்… எங்கள் ஓட்டு உங்கள் ஒருவருக்கு மட்டுமே… ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான், வா தலைவா வா” என்று என அச்சிட்டுள்ளனர்.இந்த போஸ்டர் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.