சென்னை ஈசிஆர் சாலை அக்கரையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி வீட்டிற்கு திடீரென காரில் வந்த அவரது தாயாரை கட்டி அணைத்து அன்புமணி மகிழ்சியாக வரவேற்றார்.
அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வரும் நிலையில் அன்புமணியின் தாயார் அவரது இல்லத்திற்கு வந்ததே செய்தியாகப் பார்க்கப்படுகிறது. அன்புமணியின் தாயாரும், ராமதாசின் மனைவியுமான சரஸ்வதி இன்று அன்புமணியின் இல்லத்திற்கு வருகை தந்தார். பின்னர் வீட்டிற்குள் அழைத்து சென்றதும் அவரது அம்மாவின் காலில் அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி இருவரும் விழுந்து தாயிடம் ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர் அனைவரும் ஒன்றாக மதிய உணவு அருந்தினர்.

பின்னர் பாமக (செயல்) தலைவர் அன்புமணி, அவரது மனைவி சௌமியா அன்புமணி, அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என அனைவருக்கும் அன்புமணியின் தாயார் நெற்றியில் குங்குமம் வைத்து அனைவரையும் முத்தமிட்டு வாழ்த்தினார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி என தந்தை மகன் இடையே அதிகார மோதல் நிலவி வரும் சூழலில் மருத்துவர் ராமதாசின் மனைவி அவரது மகன் அன்புமணியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்ற வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.




