சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விழுத்துளேன். வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தேன் எனவும் கூறினார்.
சசிகலா குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி ஜெயலலிதா இருக்கும் போது சசிகலா அதிமுகவிலேயே இல்லை என தெரிவித்துள்ளார். சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார். அவரது வருகைக்கு பிறகு தமிழக அரசியல் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் முதல்வர் இவ்வாறு கூறியிருக்கிறார்.