அமெரிக்காவில் நடைபெற்ற அரசுமுறை சர்வதேச இளம் அரசியல் தலைவர்கள் பயிற்சி முகாமை முடித்து விட்டு தாயகம் திரும்பியுள்ளார் தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா.
பயிற்சி முகாமுக்கு இடையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இயங்கி வரும் Overseas Friends of BJP எனும் அயலகபா.ஜ.கபிரிவின் கூட்டங்களில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி அவர்களின் 9 வருட ஆட்சியின்சாதனைகள் குறித்து பேசி அசத்தியுள்ளார்.
டெக்சாஸ்மாகாணம்டாலஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் 150 இந்தியர்கள்கலந்துக்கொண்டனர். இதே போல அமெரிக்க தலைநகர் வாஷிங்க்டன் DC, மிச்சிகன் மாகாணம், டெட்ராய்ட் நகரம், ஐயோவா மாகாணம், டிமாய்ன்ஸ் நகரம், டெக்சாஸ் மாகாணத்தில், சான்ஆண்டான்யோ, ஆஸ்டின், ஹூஸ்டன், டாலஸ் நகரங்கள், கலிபோர்னியா மாகாணத்தில் சான்ப்ரான்ஸிஸ்கோ, ப்ளோரிடா மாகாணத்தில் டாம்பா, பாம் பீச், ஓர்லேண்டோ, ஜாக்ஸ்ன்வைல் ஆகிய நகரங்களில் பல கூட்டங்களில் SG சூர்யா உரை நிகழ்த்தி பா.ஜ.கஅயலகஆதரவாளர்களைஉற்சாகப்படுத்தியுள்ளார்.
இது போக அமெரிக்காவில்பயிலும் இந்திய மாணவர் குழுக்களையும் சந்தித்து உரை நிகழ்த்தியுள்ளார். டாலஸ் நகரில் நடந்த கூட்டத்தில் “இந்திய வெளியுறவுத்துறைஅமைச்சகசெயல்பாடுகள் கடந்த 9 ஆண்டு பிரதமர் மோடி ஆட்சியில்துரிதப்படுத்தப்பட்டது மட்டுமின்றி வெளிநாடு வாழ் இந்தியர்கள் எந்த தேவையெனினும் உடனடியாக தூதரகங்களை தொடர்பு கொண்டு தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறது” என கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து “பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா அசூர வளர்ச்சி பெறுவதை அயலகஇந்தியர்கள்பிரம்மிப்புடன் பார்த்து வருகிறார்கள்” என்று தனது முகநூல்பதிவில்குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்ல அண்டை நாடுகளிலும் பா.ஜ.க தனது கட்சி செயல்பாடுகளை மெனக்கெட்டு இந்தியர்களுக்கு கொண்டு சேர்ப்பது வியப்பாக தான் உள்ளது.