மதுரை – செங்கோட்டை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம் மதுரை செங்கோட்டை ரயில் இலைகளுக்கு இடையே ஆகஸ்ட் 30 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது
மதுரை – செங்கோட்டை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம் மதுரை செங்கோட்டை ரயில் இலைகளுக்கு இடையே ஆகஸ்ட் 30 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது
வண்டி எண் 06504 மதுரை – செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06503 செங்கோட்டை – மதுரை விரைவு சிறப்பு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 03.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 07.10 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 2 சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த தினசரி சிறப்பு ரயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வேயில் மதுரை கோட்ட மேலாளர் அறிவிப்பு