அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு யோசிக்க மாட்டீர்களா என திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதன்படி, வீடுகளில் இருந்து குப்பை கொட்டுவதற்கு 10 ரூபாய் முதல் 100 வரையிலும் வசூலிக்கப்படும் எனவும், ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தாற்போல கட்டணமும் நிர்ணயித்தது.
கொரோனா காலமான தற்போது இவ்வாறு வரி வசூலிப்பது பகல் கொள்ளை போல இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், குப்பை கொட்டக் கட்டணம் என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் எனவும், இல்லையெனில் திமுக ஆட்சியில் திரும்பப் பெறப்படும் எனவும் அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து, திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் முதல்வரின் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
read more: எம்.ஜி.ஆர் புகழை தட்டிப்பறிக்க விடமாட்டோம்: அதிமுக உறுதிமொழிக்கு காரணம்?
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ன் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி.குப்பை கொட்டவும் வரி என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா? என அதிமுக அரசுக்கு கேள்வி எழுப்பிய அவர், “எண்ணித்துணிக கருமம் என அதிமுக அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.