எனது நெஞ்சம் நிறைந்த நண்பர் கமல்ஹாசன் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல் பிறந்தநாள்
நடிகரும், மக்கள் நீதிமய்ய தலைவருமான கமல்ஹாசனின் 66வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட
பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
நெஞ்சம் நிறைந்த நண்பர்
கருணாநிதியால் ‘கலைஞானி’ என்று போற்றப்பட்டவரும், எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரியவருமான நண்பர் கமல்ஹாசனுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். நலமுடனும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.