திமுக தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாகவும் கருத்து கூறினார். எப்போது பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து கழண்டுபோகிறார் எனத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அதிமுக உடையப்போகிறது என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு அதிமுகவிலிருந்து அவர் கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஸ்டாலினுக்கு திருச்சியில் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை உடைக்க நடந்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் தீட்டிய சதித் திட்டமும் முறியடிக்கப்பட்டது என்றார். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டுப் பார்க்க முடியாது என சவால் விடுத்தார்.
இந்த நிலையில் மதுரை சோழவந்தானில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், அதிமுக இரண்டாக உடையும் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் திமுகதான் இரண்டாக உடைய போகிறது. அதிகார சண்டை அவரது குடும்பத்தில் உள்ளது. முதலில் அவரது குடும்பச் சண்டையை சரி செய்து அவர் மீண்டுவர அடுத்த தேர்தல் ஆகிவிடும். ஆகவே, ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்று கூறினார்.
read more: திருவள்ளுவர் மண்ணுக்கு வந்ததில் பெருமை: தலைமை நீதிபதி பெருமிதம்
தமிழகத்தில அஇஅதிமுகதான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் மாற்று கருத்து இல்லை என்ற உதயகுமார், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை. முதல்வருக்கு ஜாதகம் நன்றாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.