2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின்போது தினகரன் ஆர்.கே.நகரில் நின்று வெற்றிபெற்ற குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் அமமுக கோரிக்கை வைத்தது. அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது. 2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. மக்களவைத் தேர்தலில் அதே சின்னத்தை கேட்ட நிலையில், கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் அதற்குரிய பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான சின்னங்களைத் தேர்தல் ஆணையம் நேற்று ஒதுக்கியது. அதன்படி, அமமுகவுக்கு குக்கர் சின்னம் சின்னம் ஒதுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
read more: பாஜக தேர்தல் அறிக்கை: ஹெச்.ராஜா தலைமையில் குழு அமைப்பு!
இதனை பகிர்ந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் நல்லாசிகளைப் பரிபூரணமாகப் பெற்றிருக்கும் நம்முடைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றிச் சின்னமான குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மனு அளித்த நிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டுமே அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம்தான் கமலுக்கு முக்கியம் என்பதால் மாற்றுச் சின்னத்தை தேடும் பணி ஆரம்பித்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த கமல்ஹாசன், “வெறும் ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள்” என்றார்