வைகைச் செல்வன், தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வைகைச் செல்வன், தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் தலைவர்கள் பெயரில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2021ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது வைகைச்செல்வனுக்கு வழங்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது அ.தமிழ்மகன் உசேன்; அண்ணல் அம்பேத்கர் விருது – வரகூர் அ.அருணாச்சலம், பேரறிஞர் அண்ணா விருது – மறைந்த கடம்பூர் ஜனார்த்தனன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பெருந்தலைவர் காமராஜர் விருது- ச.தேவராஜ்; மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பூவை செங்குட்டுவன், பாவேந்தர் பாரதிதாசன் விருது – பாடலாசிரியர் அறிவுமதி என்ற மதியழகன், ‘தமிழ்த்தென்றல்’ திருவிக விருது – வி.என்.சாமி,முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – வீ.சேதுராமலிங்கம் ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
read more: மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறேனா? கமல்ஹாசன் பதில்
இந்த விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார். விருதாளர்களுக்கு பரிசுத்தொகை ரூ.1 லட்சம், தமிழ்த்தாய் விருது பெறும் அமைப்புக்கு ரூ.5 லட்சம், தமிழ்ச்செம்மல் விருதுபெறுவோருக்கு ரூ.25 ஆயிரமும், பாராட்டுச்சான்றும் வழங்கப்படும்.