Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர்!

August 30, 2025

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் ஒரு வார காலம் ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்

தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதில் பங்கேற்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதல்வர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022 மார்ச்சில் துபாய், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.6,100 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள், 2024 தொடக்கத்தில் ஸ்பெயினில் ரூ.3,440 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் ரூ.7,616 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டுகளை ஈர்க்க முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் போது முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதன்படி, தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் ஒரு வாரம் லண்டன் மற்றும் ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.

இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனி புறப்படும் முதல்வர் இன்று இரவு 9 மணி அளவில் ஜெர்மனி சென்றடைகிறார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஜெர்மனியில் ஐரோப்பாவில் மாபெரும் தமிழ் கனவு – 2025 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதன்படி, ஆகஸ்ட் 31, 2025 அன்று பிற்பகல் 2:30 மணி முதல் 5:30 மணி வரை, கோலோன் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழர்களை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

செப்டம்பர் 1ம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் தமிழக முதலமைச்சர் செப்டம்பர் 2ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். செப்டம்பர் 3ம் தேதி தேதி லண்டனில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார். செப்டம்பர் 4 ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெரியார் திருவுருவப்படத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் இரண்டு நூல்களையும் வெளியிடுகிறார். இந்த பயணத்தில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. செப்டம்பர் 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து புறப்பட்டு செப்டம்பர் 8ம் அதிகாலை சென்னை வந்தடைகிறார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயாராக உள்ளது – மா.சு

Next Post

நீலகிரியில் ஸ்பீக்கருக்குத் தடையா?

Next Post

நீலகிரியில் ஸ்பீக்கருக்குத் தடையா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version