மம்தா உள்ளிட்ட 3 புதிய எம்.எல்.ஏ-களுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லி, மேற்குவங்கம் மாநிலத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் நடத்தியது. அதில், இடைதேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இதில் பவாணிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட மாநில முதலமைச்சர் மம்தா பானஜார்ஜி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
மம்தாவை தவிர, ஜாங்கிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஹகீர் ஹுசைன் (திக) மற்றும் சம்சர்கஞ்ச் தொகுதி உறுப்பினர் அம்ரில் இஸ்லாம் (திக) ஆகியோரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், இன்று மேற்கு வங்கம் மாநில சட்டப்பேரவை வளாகத்தில் (முதலமைச்சர்) சட்டமன்ற உறுப்பினர் மம்தா பானர்ஜி, ஜாகிர் ஹுசைன் மற்றும் அம்ரில் இஸ்லாம் ஆகியோருக்கு மாநிலத்தின் ஆளுநர் ஜகதீப் தங்கர் பதிவு பிரமாணம் செய்து வைத்தார். வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவியேற்று வைப்பார்கள், ஆனால் வாரலாற்றில் புதிய அத்தியாயமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாநிலத்தின் ஆளுநர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரால் 6 மாத காலம் முதலமைச்சராக பதவி வகிக்கலாம் எனும் அரசியல் சாசன விதிநமுறையின் படி மம்தா பானர்ஜி கடந்த மே 5ம் தேதி மமதா பதாவியேற்றார். இந்நிலையில் இம்மாதத்துடன் அதற்கான காலம் நிறுவடையும் நிலையில் சட்டமன்ற உறுப்பினராக மமதா தேர்தெடுக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பதில் இருந்த சிக்கல் இப்போது விலகியுள்ளது.