சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான காணொலி பொதுக்கூட்டம் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கி நவம்பர் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான காணொலி பொதுக்கூட்டம் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கி நவம்பர் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
காணொலி பொதுக்கூட்டம்
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டது. இந்த நிலையில், தி.மு.க. தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களில் முப்பெரும் விழாக்களில் காணொலிக் காட்சி மூலமாகக் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, ‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பிலான ‘2021-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்கள்’ நடைபெறும்.
முதல் கட்டமாகச் சிறப்புப் பொதுக்கூட்டங்கள் கீழே குறிப்பிட்ட தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும்.
தேதிகள் அறிவிப்பு
நவ. 1 – ஈரோடு, நவ. 2- புதுக்கோட்டை (கருணாநிதி சிலை திறப்பு விழா), நவ. 3 – விருதுநகர், நவ. 5 – தூத்துக்குடி, நவ. 7 – வேலூர், நவ. 8 – நீலகிரி, நவ. 9 – மதுரை, நவ. 10 – விழுப்புரம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.