இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு மையங்களில் ஆணையாளர் ஆய்வு.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹமீதியா மேல்நிலைப் பள்ளி சத்துணவுக் கூடம் மற்றும் மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சத்துணவு கூடங்களில் இன்று இளையான்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையலர்களுக்கு கொரானா தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளும் முறை பற்றியும் அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




