உரிய அனுமதி இல்லாமலும், வழக்கு பதிவு செய்யாமல் என்னை 28 மணி நேரமாக காவலில் வைத்து உள்ளது உங்கள் அரசாங்கம்! – விவசாயிகளை கொன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி ?
டெல்லி, நேற்றைய முன்தினம் உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் கலந்து கொண்ட அரசு திட்ட விழாவில் மாநில துணை முதலமைச்சர் பங்கேற்க வந்தார். அப்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் போராட்டம் நடத்திய போது உள்துறை இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். உள்துறை இணை அமைச்சர், மகன் மற்றும் அவருடன் உடன் இருந்தவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி பல கட்சி தலைவர்கள் கண்டன குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவோடு இரவாக உயிரிலந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தியை விடியற்காலை 5 மணி அளவில் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இப்போது வர அவர் விடுக்கப்படமால் உள்ள நிலையில், விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற வீடியோவை வெளியிட்டு “பிரதமர் மோடி அவர்களே உங்களுடைய அரசு எந்த உத்தரவு மற்றும் முதல் தகவல் அறிக்கை செய்யாமல் என்னை 28 மணி நேரமாக அடைத்து வைத்துள்ளனர்;ஆனால், கார் ஏற்றி கொன்றவர்களை ஏன்? இதுவரை கைது செய்யவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியங்ககாந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் உத்திரபிரதேச அரசு இல்லங்களை முற்றுகையிட்டு வரும் நிலையில் எத்தனை நாட்கள் ஆனாலும் நான் நிச்சயம் சந்தித்த பின்னரே திரும்புவேன் என உறுதியாக உள்ளார் பிரியங்ககாந்தி.