Friday, January 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

தார்ச் சாலை கோரிக்கை நிறைவேறியது

August 7, 2025

தனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழமாதேவி முதல் ஐடி பார்க் வரை தார்ச்சாலை அமைத்ததற்கு அத்தொகுதி எம்.பி துரைவைகோ நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில், ஐ.டி. பார்க் சாலை சீரமைக்க வேண்டும் என்ற என் கோரிக்கை ஏற்கப்பட்டு புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டது. அந்தப்பணியை 09.06.2025 அன்று, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தேன்.

எளிய மக்களுக்காக இறுதி வரை போராடுவேன் – துரை வைகோ

மல்லை சத்யா விஷ பிரசாரம் செய்கிறார்

ரயில்வே மேம்பாட்டுக் கோரிக்கைகளை வழங்கிய துரை வைகோ

அப்போது, சோழமாநகர் மக்கள் நல மன்றம் நிர்வாகிகள் என்னிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அதில், சோழமாதேவி முதல் ஐடி பார்க் வரையுள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளதாகவும், புதிய சாலை அமைத்துத் தரவேண்டும் என்றும், மேலும், மிகவும் பழுதான பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் அமைத்துத் தரவேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட நான், அவர்கள் குறிப்பிட்ட அந்த சாலையை அன்றைய தினமே பார்வையிட்டேன். சாலை மிகவும் குண்டும், குழியுமாகவே இருந்தது. சோழமாதேவி பழைய பாலமும் சேதமடைந்த நிலையில் இருந்ததைக் கண்டேன். இவ்விரு கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு முயற்சிக்கிறேன் என்று அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தேன்.

அன்றைய மறுநாள் 10.06.2025 அன்று என் தலைமையிலும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் (DISHA) இந்த கோரிக்கையின் அவசியம் குறித்துப் பேசினேன். இதனைத் தொடர்ந்து தற்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.சரவணன் அவர்களிடம், 11.07.2025 அன்று நேரில் சந்தித்து மறுபடியும் நினைவூட்டல் கடிதம் கொடுத்தேன். என் கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள், ஐ.டி. பார்க் முதல் சோழமாதேவி செல்லும் சாலை சீரமைக்கும் பணிகளைத் தொடங்கிட உத்தரவிட்டுள்ளார் என்றும், சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எனக்கு தகவல் வந்தது. உடனடியாக மறுமலர்ச்சி திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களை தொடர்பு கொண்டு, அவ்விடத்தில் நடைபெறும் பணிகளைப் பார்வையிட அறிவுறுத்தினேன்.

அதன்படி அவரும், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பீட்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள் 01.08.2025 இன்று இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் வேலையைப் பார்வையிட்டனர். அப்போது, சோழமா நகர் மக்கள் நல மன்றத்தின் தலைவர் மா.கிருஷ்ணமூர்த்தி, அப்பகுதியைச் சேர்ந்த 81வயது பெரியவர் ராஜப்பா, இளைஞர் தனசேகரன் உள்ளிட்ட பொதுமக்கள், கோரிக்கை மனு வழங்கிய ஒரு மாதத்தில் சாலைப் பணிகள் நடைபெறுவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. நாடாளுமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சிக்கு எங்களது நன்றியைத் தெரிவிக்குமாறும் கூறினார்கள் என்பதை அறிந்தேன். இதுபோன்ற மக்கள் நலப்பணிகளைச் செய்யும் போது, மக்கள் அளிக்கும் பாராட்டு எனக்கானது இல்லை. அது என்னை தேர்ந்தெடுத்த திருச்சி மக்களுக்கானது என்ற வகையில் மகிழ்ச்சியடைகின்றேன். மேலும், சோழமாநகர் மக்களின் புதிய பாலம் கட்டும் கோரிக்கையையும் விரைந்து செயல்படுத்திட தொடர் முயற்சி எடுப்பேன். எனது கோரிக்கையை ஏற்று சோழமாதேவி பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு திருச்சி தொகுதி மக்களின் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஏழாமாண்டு நினைவுப் பேரணி!

Next Post

மெட்ரோ டிக்கெட் 50% தள்ளுபடி!

Next Post

மெட்ரோ டிக்கெட் 50% தள்ளுபடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version