ஜெயலலிதாவால் துரோகி என அடையாளம் காணப்பட்டவர் டி.டி.வி.தினகரன் என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என சசிகலா எங்கும் கூறவில்லை. அவருக்கு எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. எந்த வகையிலும் தொடர்பு இல்லாத ஒரு நபரை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது நன்றாக இருக்காது என்று தெரிவித்தார்.
ஜெயலலிதாவால் துரோகி என்று அடையாளம் காணப்பட்டவர் டி.டி.வி.தினகரன். அவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு வகையான திட்டங்களை கொண்டு வருகிறார்.இவர்கள் தவறு செய்தவர்கள் என்று மக்கள் முழுமையாக ஏற்று அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இனி எந்த ரூபத்திலும் அவர்கள் வந்தாலும் மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்றார்.
Read more – புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மேலும், எங்களுடைய கொள்கை வேறு, பா.ஜ.கவின் கொள்கை வேறு தான். இருந்தாலும் அவர்களுடன் கூட்டணியில் இருப்பதால் தான் மத்திய அரசை வற்புறுத்தி ஒரு வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பெற செய்தோம். இந்தியாவில் எந்த மாநிலமும் இப்படி ஒரு சாதனையை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.