தூத்துக்குடியில் திமுகவின் ஆன்லைன் மூலமான உறுப்பினர் சேர்க்கைக்கான முகாமை, மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் அமைப்பு ரீதியாக தங்களை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதன்படி, திமுக சமீபத்தில் “எல்லோரும் நம்முடன்” என்ற பெயரில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியது. ஒரு சில நாட்களிலேயே அந்த முகாம் மூலம் ஏராளமானோர் திமுகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ., ஆன்லைன் மூலமான ஆட்சேர்ப்பு முகாமை இன்று தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது, ஏராளமானோர் கட்சி உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் அவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் த ஜெயக்குமார் ரூபன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. அபிராமிநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.